search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் மூன்றாவது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் - ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    நாடு முழுவதும் மூன்றாவது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் - ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் மூன்றாவது நாளாக இன்றும் தொடர உள்ள நிலையில், ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    சென்னை:

    டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்கியது. லாரி ஸ்டிரைக் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை.

    தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது.
    Next Story
    ×