search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - தென்கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
    X

    இந்தியா - தென்கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    இந்தியா மற்றும் தென்கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாட்டு அமைச்சர்களும் இன்று கையெத்திட்டனர்.
    புதுடெல்லி :

    தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் வரும் 11-ம் தேதிவரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன், அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் குழுவுடன் அவர் நேற்று டெல்லி வந்தடைந்தார்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் தென் கொரியா இடையே வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தென் கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய மந்திரி சுரேஷ் பிரபு, இந்தியா மற்றும் தென்கொரியா நாடுகளின் நல்லுறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல, இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் வணிகம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே,  தென்கொரிய வர்த்தக மந்திரி கிம் ஹியூன் சோங் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், ‘இந்தியா - தென்கொரியா இடையே மேக் இன் இந்தியா திட்டத்தின் முதல்படியாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட உள்ள சாம்சங் செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை பிரதமர் மோடி மற்றும் தென்கொரிய அதிபர் மூன் ஆகியோர் இன்று பார்வையிட உள்ளனர்.

    தற்போது 60 லட்சம் செல்போன்களை தயாரிக்கும் இந்த தொயிற்சாலையில் இருந்து, 2020-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1 கோடி செல்போன்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.
    Next Story
    ×