என் மலர்
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நேற்று கடத்தி சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. #Copkidnap
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது. போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த ஜாவித் அகமதுவை பயங்கரவாதிகள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தின் பரிவான் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஜாவித் அகமது உடல் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் கான்ஸ்டபிள் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. #Copkidnap
Next Story






