search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீர் கவர்னருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
    X

    ஜம்மு காஷ்மீர் கவர்னருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

    காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஸ்ரீநகர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோராவுடன் ஆலோசனை நடத்தினார். #RajnathinJK #Rajnath #Vohra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது. கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றடைந்தார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் சென்றுள்ளனர்.

    ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளம் வந்த ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து கவர்னர் மாளிகை சென்றார். அம்மாநில கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.

    இன்று அமர்நாத் கோவிலுக்குச் செல்லும் அவர், அங்கு பனி லிங்கத்தை தரிசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RajnathinJK #Rajnath #Vohra
    Next Story
    ×