search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு - கர்நாடக அரசு
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு - கர்நாடக அரசு

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி குறைவால் ஆசிரியர்கள் சம்பளத்தை குறைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. #KarnatakaEducation #TeachersSalary

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி ஏற்றபின்பு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கல்வியின் தரம் மிகவும் பின் தங்கி விட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. குறிப்பாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து விட்டது. சில மாவட்டங்களில் சில பள்ளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத பள்ளிகளும் உள்ளது.

    இதற்கு ஆசிரியர்களே காரணம் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்தாததால் தான் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     


    எனவே கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்மானால் ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும். தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு போன்ற தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. விரைவில் அதிரடி முடிவு அறிவிக்க மாநில கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    கர்நாடகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று நடைபெறும் பள்ளிகள் 9,000 உள்ளது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ.3000 கோடி பணம் அரசு வழங்குகிறது இவ்வளவு செலவிட்டும் ஆசிரியர்கள் பணி சிறப்பாக இல்லை என்று அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு வெளியான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,08,227 மாணவர்கள் எழுதியதில் 49,408 பேர் தோல்வி அடைந்தனர். அதாவது 24 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

    இதையடுத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்யவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி உதவியை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. #KarnatakaEducation #TeachersSalary

    Next Story
    ×