என் மலர்
செய்திகள்

உ.பி. மாநிலத்தில் காங்கிரஸ் அமைப்புகளை கலைத்து ராஜ் பப்பர் உத்தரவு
உத்தப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் நிர்வாக அமைப்புகளை கலைத்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் உத்தரவிட்டுள்ளார். #UPCongress #RajBabbar
லக்னோ :
உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக அமைப்புகளை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் இன்று கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில நிர்வாக அமைப்பு மற்றும் நிதி் விவகார அமைப்புகளில் பதவி வகித்த சிலரையும் அவர் நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஆர்.பி. திரிபாதி வெளியிட்டார்.
அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, கலைக்கப்பட்ட இடங்களில் திறமையான புதிய நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைக்கப்பட்ட உ.பி. மாநில ஊடக அமைப்பு கடந்த இரண்டு மாதமாகவே செயல்படாத நிலையில் இருந்துவந்தது. அதில், 21 பேர் செய்தி தொடர்பாளர்களாக பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPCongress #RajBabbar

Next Story