search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஜே குரியனை மீண்டும் தேர்வு செய்ய கேரள காங். தயக்கம் - இளம் தலைவருக்கு வாய்ப்பு
    X

    பிஜே குரியனை மீண்டும் தேர்வு செய்ய கேரள காங். தயக்கம் - இளம் தலைவருக்கு வாய்ப்பு

    செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, மாநில தலைமை உள்ளிட்ட பலரை மாற்ற ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #KeralaCongress
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் சமீபத்தில் நடந்த செங்கனூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு உள்ள இந்த தொகுதியில் தோல்வியடைந்தது அக்கட்சியின் மாநில தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    77 வயதாகும் குரியனை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பால்ராம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளிப்படையாக கருத்து பதிவிட்டுள்ளார். 1380-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருக்கும் அவருக்கு ஓய்வளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மாநில தலைவராக இருக்கும் ஹசன் மாற்றப்பட்டு இளம் தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியின் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கும் ராகுல் காந்தி நாடு திரும்பிய உடன் புதிய தலைவர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

    அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாம் கட்ட தலைவர்களையும் மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    Next Story
    ×