என் மலர்
செய்திகள்

2019 தேர்தலிலும் பிரதமர் பதவி காலி இல்லை - முக்தர் அப்பாஸ் நக்வி
கோவாவில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பங்கேற்று பேசுகையில், 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை என தெரிவித்துள்ளார். #PMPost #MukhtarAbbasNaqvi
பனாஜி:
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவாவில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு தேவையான நல்லாட்சியை வழங்கி வருகிறார்.
பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணி அமைத்துள்ளன. அதில் 20-க்கு மேற்பட்டோர் பிரதமர் பதவிக்கான கனவுகளில் உள்ளனர்.
ஆனால், அவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை. ஏனெனில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தெரிவித்தார். #PMPost #MukhtarAbbasNaqvi
Next Story






