search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்
    X

    பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

    புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. #AppleSmartWatch #AppleWatchSavesLife

    மும்பை:

    பிரபல அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, வேறுபாடுகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிரை காப்பாற்றி உதவியுள்ளது. அந்த பெண்ணின் இதய துடிப்பின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது. 

    புனேவை சேர்ந்தவர் ஆர்த்தி ஜொஜெல்கர் (53). வழக்கறிஞரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளார். மேலும், எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதையும் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து அவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.

    அந்த வாட்ச்சின் உதவியினால் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #AppleSmartWatch #AppleWatchSavesLife
    Next Story
    ×