என் மலர்
செய்திகள்

உத்தரகாண்டில் 5 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ - ஏராளமான விலங்குகள் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து நாட்களாக ஹரித்வார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளன. #Uttarakhandforestfire
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவத் தொடங்கியது. இவ்வாறு நான்கு மாவட்டங்களில் 5 நாட்களாக பற்றி எரியும் தீயினால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐந்து நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிவதால், ஏராளமான வனவிலங்குகள் தீயில் கருகி இறந்துள்ளன. இதனால் மின்கம்பங்கள் மற்றும் செல்போன் டவர்கள் சேதமடைந்தன. கடும் புகை மூட்டம் காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் போதிய வன ஊழியர்கள் இல்லாத காரணத்தால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக ஆங்காங்கே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். #Uttarakhandforestfire

கர்வால், குமாவோன் காட்டுப்பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கருகி உள்ளன. ஸ்ரீநகர் மற்றும் ஹரித்வார் மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹரித்வாரில் மானசா தேவி கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் பிடித்த தீ, அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவி உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story