என் மலர்

  செய்திகள்

  உ.பி. மேம்பாலம் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு
  X

  உ.பி. மேம்பாலம் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உ.பி. மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #VaranasiFlyoverCollapse #PMModi

  புதுடெல்லி:

  உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரு.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. #VaranasiFlyoverCollapse #PMModi
  Next Story
  ×