search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றியை நெருங்கும் எடியூரப்பா - ஷிகாரிபுரா தொகுதியில் 8000 வாக்குகள் முன்னிலை
    X

    வெற்றியை நெருங்கும் எடியூரப்பா - ஷிகாரிபுரா தொகுதியில் 8000 வாக்குகள் முன்னிலை

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 8000 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிக்கோட்டை நெருங்கியுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க அந்த மேஜிக் எண்ணை நெருங்க ஆரம்பித்தது.

    10.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. இந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.



    100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நெருங்கியிருப்பதால் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் தான் போட்டியிட்ட ஷிகாரிபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். #KarnatakaVerdict #KarnatakaElectionResults
     
    Next Story
    ×