என் மலர்
செய்திகள்

வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலி இல்லை - ராம் விலாஸ் பஸ்வான்
வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை என காங். தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். #RahulGandhi #RamVilasPaswan
பாட்னா:
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம் விலாஸ் பஸ்வான், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை மந்திரியுமாக இருந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்க தயார் என பேசியுள்ளார்.

பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியால் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் மோடியே பெரும்பான்மை பெற்று மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார். எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவி காலியாக இல்லை.
அப்படி இருக்கும்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எப்படி பிரதமராக வரமுடியும்? மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். மோடி இரண்டாவது தடவை பிரதமராக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார். #RahulGandhi #RamVilasPaswan
Next Story






