search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தல் - 3 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
    X

    கர்நாடக தேர்தல் - 3 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

    கர்நாடக மாநில சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்களுக்கு உள்ளான 3 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. #Repoll #KarnatakaAssembly
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு இயந்திரங்கள் குளறுபடிகள் தொடர்பான புகார்கள் எழுந்ததால் பெங்களூருவில் உள்ள ஹெப்பல் தொகுதிக்குட்பட்ட லொட்டேகொல்லஹல்லி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    1444 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள குஸ்ட்டாகி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளுக்கு சேர்த்து நாளை தேர்தல் நடைபெறும் என கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் இன்றிரவு அறிவித்துள்ளார்.

    இந்த இரு வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட சுமார் 275 வாக்காளர்கள் தொடர்பாக பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் இங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். #Repoll #KarnatakaAssembly
    Next Story
    ×