என் மலர்
செய்திகள்

இந்தியாவில் 30 சதவீத ரெயில்கள் தாமதமாக வருவதாக ஆய்வில் தகவல்
இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டில் இல்லாத அளவிற்கு 2017-18ம் ஆண்டில் சுமார் 30 சதவீதம் ரெயில்கள் தாமதமாக வந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. #IndianRailways
புதுடெல்லி:
ரெயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் போதிய ரெயில்கள் இயக்காதது, சரியான நேரத்துக்கு ரெயில்கள் வராதது போன்ற குறைபாடுகள் உள்ளன. 2015-16-ம் ஆண்டில் 77.44 சதவீத ரெயில்களும், 2016-17ம் ஆண்டில் 76.69 சதவீத ரெயில்களும் சரியான நேரத்திற்கு ரெயில் நிலையங்களுக்கு வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது 2017-18ம் ஆண்டில் 71.39 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் சுமார் 30 சதவீத ரெயில்கள் தாமதமாக வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணி நடப்பதே தாமதத்துக்கு காரணம் என ரெயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.
4,425 இடங்களில், சுமார் 18 லட்சம் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டில், 73 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன. இது 2015-16-ம் ஆண்டில் 107 ஆகவும், 2016-17ம் ஆண்டில் 104 ஆகவும் இருந்துள்ளது.

பராமரிப்பு பணிகள் விஷயத்தில் கவனம் செலுத்தி வருவதால் ரெயில் விபத்துகள் குறைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #IndianRailways
Next Story