search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் - பிரதமர் மோடி பேச்சு
    X

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் - பிரதமர் மோடி பேச்சு

    கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு உயரும் என பிரதமர் மோடி தெரிவித்தார். #FarmersWithModi #KarnatakaElections2018 #PMModi
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபைத் தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள பாஜக கிஷன் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் நமோ ஆப் மூலம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜக ஆட்சியில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயம் நமது கலாச்சாரம், அதனை பாதுகாப்பது நமது நமது கடமை. பிரதமரின் பாசல் பிமா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் பயன்பெற்றுள்ளன. ஆனால் கர்நாடகாவில் இது குறித்து புகார் வந்துள்ளது. நம்முடைய எம்.பி. ஒருவரின் உதவியால் ஒரு தொகுதியில் உள்ள மக்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர்.

    கர்நாடகாவிற்கு விவசாயிகளின் வளர்ச்சிகாக உழைக்கும் அரசு தேவைப்படுகிறது. தற்சமயம் உள்ள மாநில அரசின் அக்கறையின்மையால் விவசாயிகள் மத்திய அரசின் பாசல் பிமா யோஜ்னா திட்டத்தினால் பயன்பெற வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அதிகரிக்கும்.

    கர்நாடக அரசின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சரிவர சென்று சேரவில்லை. அரசு சரியாக செயல்பட்டால் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு வரும். விவசாயிகளுக்கு உண்மைகளை கூறி அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து அவர்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக இருக்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.

    இவ்வாறு மோடி பேசினார். #KarnatakaElections2018 #PMModi #FarmersWithModi
    Next Story
    ×