என் மலர்
செய்திகள்

மெகானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்சில் சேரவேண்டாம் - திரிபுரா முதல் மந்திரி
மெகானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டாம் என்று திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார். #TripuraCM
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் பிப்லாப் குமார் தேப். இவர் சிவில் சர்வீஸ் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்பு ஆர்ட்ஸ் மாணவர்கள் குடிமைப் பணியாளர்கள் பணியை தேர்வு செய்தனர். அதன்பின்னர், டாக்டர்கள், இன்ஜினியர்கள் ஆகியோர் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்ய துவங்கிவிட்டனர்.
தற்போதையை நிலையில், சிவில் என்ஜினியர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் பணியை தேர்வுசெய்ய வேண்டும், சிவில் சர்வீஸ் பணியை பொறுத்தவரை சமூகத்தை கட்டமைக்க நிர்வாகத் திறன் மிகவும் அவசியம், சிவில் இன்ஜினியர்களுக்கு அந்த திறன் அதிகம் உள்ளது.
அதேவேளையில், மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்.
திரிபுரா முதல்வர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் ஆகியவை இருந்தது எனக்கூறி விமர்சனத்துக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. #TripuraCM #Tamilnews
Next Story