என் மலர்

  செய்திகள்

  ரெயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை
  X

  ரெயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக எல்.டி.சி. என்று அழைக்கப்படுகிற விடுமுறை கால பயண சலுகை வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
  புதுடெல்லி:

  ரெயில்வே ஊழியர்களுக்கு முதல் முறையாக எல்.டி.சி. என்று அழைக்கப்படுகிற விடுமுறை கால பயண சலுகை வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

  இது தொடர்பாக மத்திய பணியாளர்கள் நலன் துறை அமைச்சகம், ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

  அரசு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் விடுமுறை கால பயண சலுகை அனுமதிக்கப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களுக்கு இலவச பயண அனுமதி வழங்கப்படுவதால், விடுமுறை கால பயண சலுகை வழங்கப்படுவது இல்லை.

  ஆனால் ரெயில்வே ஊழியர்களுக்கும், இந்த சலுகையை வழங்க வேண்டும் என்று 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது.

  இதுபற்றி பணியாளர் நலன் துறை அமைச்சகம், ரெயில்வே அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்தது. அதைத் தொடர்ந்து, அகில இந்திய அளவிலான விடுமுறை கால பயண சலுகையை ரெயில்வே ஊழியர்கள் 4 ஆண்டுகளில் ஒரு முறை பயன்படுத்திக்கொள்ளலாம். இது ரெயில்வே ஊழியர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

  அதே நேரத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு ரெயில்களில் இலவச பயண அனுமதி தொடரும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Tamilnews 
  Next Story
  ×