search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் 10-ந்தேதி மோடி தலைமையில் ‘சத்யாகிரக’ நூற்றாண்டு விழா- முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு
    X

    பீகாரில் 10-ந்தேதி மோடி தலைமையில் ‘சத்யாகிரக’ நூற்றாண்டு விழா- முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

    பீகாரில் 10-ந்தேதி நடக்கும் சத்யாகிரக நூற்றாண்டு விழாவில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ளுமாறு பீகார் மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #satyagraha #pmmodi

    பாட்னா:

    மகாத்மா காந்தி நாட்டின் விடுதலைக்காக 1917-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் சத்யாகிரக போராட்டத்தை தற்போதைய பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன் நூற்றாண்டு நிறைவையொட்டி பீகாரில் சம்பரான் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந்தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சத்யா கிரக நூற்றாண்டு விழாவையொட்டி தூய்மை இந்தியா திட்டப்பணிகளை தீவிரப்படுத்துகிறார்.

    அப்போது தூய்மை இந்தியா திட்ட தூதர்களை சந்திக்கிறார். இதில் நாடு முழுவதும் இருந்து தூய்மை இந்தியா திட்ட தூதர்கள் 20,000 பேர் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் 10,000 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாநிலத்தவர்கள்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலமாக தூய்மை இந்தியா திட்டதூதர்களுக்கு செய்தி விடுத்துள்ளார். அதில், சத்யாகிரக போராட்ட நூற்றாண்டு நினைவையொட்டி தூய்மை இந்தியா திட்டப்பணிகளை தீவிரப்படுத்துவதே மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நூற்றாண்டு விழாவில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ளுமாறு பீகார் மாநில அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் ஓராண்டுக்கு சத்யாகிரக நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. #tamilnews #satyagraha #pmmodi

    Next Story
    ×