என் மலர்

  செய்திகள்

  10-ம் வகுப்பு வினாத்தாளை சி.பி.எஸ்.இ. தலைவருக்கு ஒரு நாளைக்கு முன்பே அனுப்பிய கும்பல்
  X

  10-ம் வகுப்பு வினாத்தாளை சி.பி.எஸ்.இ. தலைவருக்கு ஒரு நாளைக்கு முன்பே அனுப்பிய கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பத்தாம் வகுப்பு கணிதம் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரு நாளைக்கு முன்பே அந்த வினாத்தாள் நகல் சி.பி.எஸ்.இ. தலைவருக்கு அனுப்பப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. #CBSE #CBSEPaperLeak
  சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுக்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம் தேர்வு நேற்று நடந்து முடிந்த சுமார் 1½ மணி நேரம் கழித்துதான், வினாத்தாள் முன் கூட்டியே வெளியாகி விட்டதாக தகவல்கள் பரவியது. ஆனால் அந்த கணிதம் பாடத்தின் வினாத்தாள்கள் நேற்று முன்தினமே அதாவது செவ்வாய்க்கிழமை மாலையிலேயே வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விட்டது.

  கணிதம் வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’களில் பரப்பிய கும்பல், பெரும்பாலான கேள்விகளை ஒரு தாளில் கையால் எழுதி இருந்தது. அந்த தாளை காப்பி எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பியுள்ளனர்.

  இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால் சி.பி.எஸ்.இ. தலைவர் அனிதா கர்வாலுக்கும் அந்த வினாத்தாள் அனுப்பப்பட்டிருந்தது. இதன் மூலம் செவ்வாய்க்கிழமை மாலையிலேயே கணிதம் பாடத்தின் கேள்வித்தாள் கசிந்து விட்டதை அனிதா அறிந்தார்.

  சி.பி.எஸ்.இ. தலைவருக்கே முன் கூட்டியே வினாத்தாளை அனுப்பியதன் மூலம், இதன் பின்னணியில் உள்ள கும்பல் மிகவும் துணிச்சலுடன் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. “முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்” என்று சவால் விடும் வகையில் சி.பி.எஸ்.இ. தலைவருக்கே வினாத்தாளை அவர்கள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

  கேள்வித்தாள் முன் கூட்டியே வெளியானது பற்றி அனிதா ஏன் உஷாராகி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்தும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #CBSE  #CBSEPaperLeak
  Next Story
  ×