என் மலர்

  செய்திகள்

  கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவு
  X

  கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. #cbse #CBSEPaperLeak
  புதுடெல்லி:

  சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்த சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

  சிபிஎஸ்சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவியர் தெரிவித்தனர். இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.

  கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில், மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ-யின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், '12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவித்திருந்தது.

  சிபிஎஸ்இ தேர்வுகளின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்ச்சியாக வெளியிடப்படுவதாக புகார் வந்தநிலையில், சிபிஎஸ்இ மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #cbse #CBSEPaperLeak
   

  Next Story
  ×