என் மலர்
செய்திகள்

காவிரி விவகாரம்- டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்த சரத்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சரத்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.#CauveryWaterIssue
புதுடெல்லி:
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 29-ந்தேதிக்குள் முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றம் அருகே தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர்.பாண்டியன் தலைமையில் 90 விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே காவிரி நீர் நியாயமான முறையில் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிரதமர் தலைமையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து நல்ல முடிவு வரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். #CauveryWaterIssue #tamilnews

Next Story