என் மலர்
செய்திகள்

வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தினருக்கு இலவச பஸ் பயணம் - உ.பி. அரசு அதிரடி
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் ஒரு கோடி குடும்பத்தினருக்கு இலவச பஸ் பயணச் சலுகை அளிக்க யோகி ஆதித்யாநாத் அரசு தீர்மானித்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து 13-3-2017 அன்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றது.
முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.
அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் ஒரு கோடி குடும்பத்தினருக்கு இலவச பஸ் பயணச் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்த யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக, ஆண்டுதோறும் ஒரு குடும்பத்தாருக்கு 2990 ரூபாய் மானியத்தை மாநில அரசின் போக்குவரத்து கழகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அரசு உயரதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மொத்தத்தில் இந்த திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலவச பயணத்துடன் பயனாளிகளின் குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான விபத்து காப்பீடும் செய்யப்படும். இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் விபத்தில் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக பெற முடியும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #tamilnews

Next Story