என் மலர்
செய்திகள்

மகாத்மா காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 70-வது நினைவு தினத்தன்று பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன் உட்பட பல அரசியல் தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். #MartyrsDay #MahatmaGandhi
புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று பல அரசியல் தலைவர்கள் புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி சுனில் லன்பா மற்றும் விமானப்படைத் தளபதி பிரேந்தர் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து டுவிட் செய்த பிரதமர் 'மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாட்டிற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்' என கூறினார். #tamilnews #MartyrsDay #MahatmaGandhi

Next Story