என் மலர்
செய்திகள்

அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்கும்: பிரதமர் மோடி
அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்கும் என பிரதமர்மோடி கூறியுள்ளார். #BudgetSession #Parliament
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. முன்னதாக பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும் என்றார்.
இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக கூறிய மோடி, மத்திய பட்ஜெட்டுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
‘கட்சிக்கு அப்பாற்பட்டது நாடு. எனவே, பட்ஜெட்டில் உள்ள நன்மைகளை மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது குறித்து அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஆலோசிக்க வேண்டும்’ என்றும் மோடி கூறினார். #BudgetSession #Parliament #tamilnews
Next Story






