என் மலர்

  செய்திகள்

  கமலா மில் தீ விபத்தில் 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி வேதனை
  X

  கமலா மில் தீ விபத்தில் 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி வேதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை கமலா மில் வளாக தீ விபத்தில் 14 நபர்கள் பலியானதற்கு பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். #KamalaMillsfire
  புதுடெல்லி:

  மும்பையில் உள்ள கமலா மில் வளாகத்தில்  நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர். 19 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்நிலையில், மும்பை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மும்பையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.  துயரமான இந்த சமயத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பற்றியே உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். #KamalaMillsfire
  Next Story
  ×