search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி
    X

    ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி

    ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி அஞ்சல் துறை சார்பாக நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் அஞ்சல் துறையின் சார்பாக ஜனவரி 7-ம் தேதி சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகர், பாரமுல்லா, உதாம்பூர், ஜம்மு மற்றும் ரஜோரி உட்பட 7 இடங்களில் நடைபெற உள்ள இந்த போட்டியில் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த போட்டியில் 'நீங்களே கடிதமாக இருந்தால் உங்களை வாசிப்பவர்களுக்கு என்ன கூற விரும்புவீர்கள்' என்பது அடுத்த ஆண்டிற்கான தலைப்பாகும். இந்த போட்டி 1 மணி நேரம் நடத்தப்படும். கடிதத்தில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகிக்க கூடாது.

    இந்த போட்டியில் 15 வயதுக்கு அதிகமான அனைவரும் கலந்து கொள்வர். தேசிய அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் சிறந்த கடிதங்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் முறையே, ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசாக வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் தேர்வாகும் சிறந்த கடிதங்களுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவிலான கடிதப் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×