என் மலர்
செய்திகள்

புறப்படும்போது திடீர் கோளாறு - லக்னோ விமான நிலைய ஓடுபாதையில் சிக்கிகொண்ட சவுதி விமானம்
லக்னோவில் இருந்து சவுதி அரேபியா நாட்டு விமானம் இன்று மாலை புறப்பட்டு செல்லும்போது ஏற்பட்ட திடீர் கோளாறினால் ஓடுபாதையில் ஸ்தம்பித்து நின்றது. இதனால், 9 விமானங்களின் வருகை - புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது.
லக்னோ:

சவுதி அரேபியா நாட்டுக்கு சொந்தமான சவுதி ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து ரியாத் நகருக்கு புறப்பட்டு சென்றது.
ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து சென்று உயரக் கிளம்பும் முன் விமானி திடீரென்று ‘பிரேக்’ போட்டார். இதனால், விமானத்தின் மூக்கு பகுதியில் உள்ள முன் சக்கரம் ஸ்தம்பித்தது. அந்த விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றது. இந்த சம்பவத்தினால் விமானத்தில் இருந்த சுமார் 300 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும், ஓடுபாதையின் குறுக்கே சவுதி விமானம் நின்றதால் லக்னோவில் தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. லக்னோவில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய 3 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
Next Story