என் மலர்

  செய்திகள்

  கேரளா சிறையில் உள்ள கைதிகள் ஆதார் பெற சிறப்புக்குழு
  X

  கேரளா சிறையில் உள்ள கைதிகள் ஆதார் பெற சிறப்புக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆதார் அட்டை பெறும் வகையில் சிறப்பு குழு ஒன்றை மாநில சிறைத்துறை அமைத்துள்ளது.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் உள்ள கைதிகள் ஆதார் அட்டை பெற சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறையினுள் சென்று கைதிகளுக்கு ஆதார் வழங்கும் விதமாக மாநில சிறைச்சாலை அதிகாரிகள் இக்குழுவினை அமைத்துள்ளனர்.

  சிறைச்சாலையில் ஆதார் இல்லாத கைதிகளின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டன. அவர்களுக்கு ஆதார் வழங்க சிறைக்குள் சிறப்பு முகாம்கள் போடப்பட்டு ஆதாருக்கு பெயர் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து தகுந்த ஆதாரங்கள் பெறப்பட்டன.  மேலும் கைதிகளின் கைரேகை, புகைப்படத்தை பதிவு செய்ய ஸ்கேன்னர் மற்றும் கேமராவை அதிகாரிகள் சிறைக்குள் கொண்டு செல்கின்றனர்.  கேரளாவில் 3 மத்தியச்சிறைச்சாலை, 11 மாவட்ட சிறைகள், 16 துணை சிறைகள், 3 பெண்கள் சிறைச்சாலை மற்றும் 3 திறந்த சிறைச்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 8 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.

  நாட்டில் உள்ள அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகள் விடுதலையானாலும் அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும் என சிறைத்துறை முடிவு செய்துள்ளது.
  Next Story
  ×