search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய ஜி.பி.எஸ். கருவி - மந்திரி பியூஸ் கோயல்
    X

    ரெயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய ஜி.பி.எஸ். கருவி - மந்திரி பியூஸ் கோயல்

    ரெயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய எஞ்சினில் ஜி.பி.எஸ். கருவி அடுத்த ஆண்டு பொறுத்தப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிக தூரம் பயணம் செய்வதற்கு மக்கள் ரெயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். ஆனால் ரெயிலானது சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பல பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ரெயில்கள் தாமதமாக வருவதால் ரெயில் நிலையத்திற்கு எப்போது வரும் என்பது சரியாக தெரிவதில்லை.

    இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தை ரெயில்வே துறையினர் அமல்படுத்த உள்ளனர். ரியல் -டைம் பங்சுவலிட்டி மானிட்டரிங் அண்ட் அனலைசிஸ் என்ற முறை அறிமிகமாக உள்ளது. அதன் படி ஜி.பி.எஸ். கருவியானது ரெயிலில் என்ஜினில் பொறுத்தப்படும். அதனோடு பொறுத்தப்படும் ரியல் டைம் கருவியினால் ரெயில் வருகின்ற நேரம் துல்லியமாக பயணிகளுக்கு தெரிய வரும்.

    இதற்கு முன் நடைமுறையில் உள்ள முறைப்படி ரெயில்வே அதிகாரி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் நேரத்தை கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் அளிப்பார். அவர் அதனை பதிவு செய்வார். அதன் பின்னரே அது பயணிகளுக்கு சென்றடையும். அதற்கிடையில் ரெயில் இடையே பழுதடைந்தாலே அல்லது வேறு ரெயில் நிலையத்தில் தாமதமானலோ பயணிகளுக்கு தெரிய வருவதில்லை. ஆனால் இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் சரியான நேரத்தை அறிய முடியும்.



    இந்த முறையானது அடுத்த ஆண்டு முதல் டெல்லி-கவுரா மற்றும் டெல்லி-மும்பை வழிதடங்களில் செல்லும் ரெயில்களில் நடைமுறை படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

    புதிய கருவியானது உத்தரப்பிரதேசம் மாநிலம் முகல்சாரை ரெயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது. இது குறித்து அப்பகுதி ரெயில்வே மேலாளர் கிஷோர் குமார் கூறுகையில், இந்த முறையை பயன்படுத்தி ஓட்டுநர் ரெயிலை வேகமாக ஓட்டினாலோ, தாமதமாக புறப்பட்டாலோ, அவசியமில்லாத இடங்களில் நின்றாலோ அல்லது சிக்னலில் நின்றாலோ எளிதாக கண்டறிய முடியும். 5 ஓட்டுநர்கள் இந்த முறையில் சோதனை ஓட்டத்தில் 1 க்கு 9 மதிப்பெண்கள் பெற்றனர். அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என கூறினார்.

    Next Story
    ×