என் மலர்
செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப் பச்சனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆளுமைக்கான விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பனாஜி;
கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டது. விழாவின் கடைசி நாளான நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி இந்த விருதை அவருக்கு வழங்கினார். மலையால நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதே டேக் ஆப் படம் நடுவர் குழு விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
விவியன் க்யூ சிறந்த இயக்குநராகவும், நாஹுயேல் ப்ரெஸ் பிஸ்கயாத் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றனர். பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அக்ஷய் குமார் உள்பட பல நடிகர், நடிகைகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story