என் மலர்

  செய்திகள்

  குஜராத்: ஹர்திக் படேலின் கூட்டாளி பா.ஜ.க.வில் இணைந்தார்
  X

  குஜராத்: ஹர்திக் படேலின் கூட்டாளி பா.ஜ.க.வில் இணைந்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளி சிராக் படேல் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
  அகமதாபாத்:

  குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

  இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதால், இவர்மீது
  தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்றது.

  இந்நிலையில், ஹர்திக் படேலின் ஆதரவாளராக கருதப்படும் சிராக் படேல் துணை முதல் மந்திரி நிதின் படேல் முன்னிலையில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

  ஏற்கனவே, ஹர்திக் படேலின் ஆதரவாளர்களான வருண் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் கடந்த மாதம் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×