என் மலர்
செய்திகள்

ஆதார் எண்ணுக்கு இதுவரை பதிவு செய்யவில்லை - மேகாலயா முதல்-மந்திரி தகவல்
மேகாலயா முதல்-மந்திரியாக இருப்பவர் முகுல் சங்மா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் இதுவரை ஆதார் எண்ணுக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை என்று கூறினார்.
ஷில்லாங்:

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் தனி மனித சுதந்திரம் மிகவும் முக்கியம். அது இல்லாவிட்டால் ஜனநாயகத்தின் நோக்கமே சிதைந்து போகும். இதனால் தான் நான் ஆதார் எண்ணுக்கு என்னுடைய பெயரை பதிவு செய்யாமல் இருக்கிறேன். இதை தான் மாநில மக்களிடமும் நான் பகிர்ந்து கொண்டு உள்ளேன். ஆதார் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதை தெளிவுபடுத்த வேண்டும்.
அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவாலும் (பா.ஜனதா கட்சி), நானும் இதில் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் ஆலோசித்து, ஆதார் கட்டாயம் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களான எங்கள் பகுதியில் சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. எனவே மாற்ற மாநிலங்களில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story