என் மலர்
செய்திகள்

ஜி.எஸ்.டி. விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு கால அவகாசம்
ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி:
சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி விதிப்பு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. விற்பனை வரி, நுழைவு வரி, ஆயத்தீர்வை, மாநில வரி, மாவட்ட வரி போன்ற பத்துக்கும் மேற்பட்ட பலமுனை வரிகளை ஒழித்து விட்டு அதற்கு மாற்றாக ஒரு முனை வரியான சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜி.எஸ்.டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொருட்கள் அனைத்தும் ஜிஎஸ்டி முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க வணிகர்களுக்கு டிச.31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பில் உள்ள பழைய பொருட்களை டிசம்பர் 31-ம் தேதி வரை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில் மேலும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story