search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுப்பில் அனுப்பினால் ராஜினாமா செய்வேன் - பனாரஸ் இந்து பல்கலை துணைவேந்தர்
    X

    விடுப்பில் அனுப்பினால் ராஜினாமா செய்வேன் - பனாரஸ் இந்து பல்கலை துணைவேந்தர்

    விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தினால் பதவியை ராஜினாமா செய்வேன் என, பனாரஸ் இந்து பல்கலை கழகத்தின் துணைவேந்தர் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

    புதுடெல்லி: 

    பனாரஸ் இந்த பல்கலையில் கடந்த வாரம் ஒரு ஈவ்-டீசிங் சம்பவம் நடந்தது இதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் மாணவிகள் மற்றும் பெண்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனிடையே இந்த கலவரத்தை பல்கலைகழகத்துக்கு வெளியிலுள்ள சக்திகள் தூண்டிவிட்டதாக துணைவேந்தர் திரிபாதி தெரிவித்திருந்தார். அதேசமயத்தில் பல்கலைகழகத்தின் புராக்டர்(ஒழுங்கை நிலைநாட்டுபவர்) வளாகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ஏற்கனவே பதவி விலகியுள்ளார்.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் துணைவேந்தர் கிரிஷ் சந்திரா திரிபாதி மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் அவரது குற்றச்சாட்டுக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளதால் அவருக்கு அடுத்து வரும் துணைவேந்தரை நியமனம் செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பனராஸ் இந்து பல்கலைகழகத்தின் துணைவேந்தர் திரிபாதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என டெல்லி மாநில பெண்கள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, பெண்கள் மற்றும் மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திரிபாதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைகழகத்தில் மாணவிகள் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதல்களுக்கும் பல்கலைகழக நிர்வாகத்தை பொறுப்பேற்க செய்ய வேண்டும் என கடிதத்தில் மாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    இதனிடையே, துணைவேந்தர் திரிபாதியை விடுப்பில் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பதிலளித்த திரிபாதி, அரசு தன்னை விடுப்பில் செல்ல வலியுறுத்தினால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறியுள்ளார். 

    மேலும், அடுத்த துணைவேந்தர் தேர்வு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன் என்றும் கூறினார். இதனிடையே, திரிபாதிக்கு அடுத்து பொறுப்பேற்க உள்ள துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    Next Story
    ×