என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே வருடத்தில் குடியுரிமையை துறந்த 2 லட்சம் இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்
    X

    ஒரே வருடத்தில் குடியுரிமையை துறந்த 2 லட்சம் இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்

    • 2023 ஆம் ஆண்டில் 2,16,219 பேர் என தங்கள் குடியுரிமையை கைவிட்டனர்.
    • 2011 மற்றும் 2014 க்கு இடையில், சுமார் 1.2 லட்சம் பேர் மட்டுமே தங்கள் குடியுரிமையை துறந்தனர்.

    இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

    இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் கேட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

    அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 2,06,378 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டனர்.

    2020 ஆம் ஆண்டில் 85,256 பேர், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேர், 2022 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,25,620 பேர் மற்றும் 2023 ஆம் ஆண்டில் 2,16,219 பேர் என தங்கள் குடியுரிமையை கைவிட்டனர்.

    இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2011 மற்றும் 2014 க்கு இடையில், சுமார் 1.2 லட்சம் பேர் மட்டுமே தங்கள் குடியுரிமையை துறந்தனர்.

    தற்போது, உலகளவில் சுமார் 3.43 கோடி NRIகள் உள்ளனர், அவர்களில் 1.71 கோடி பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIOக்கள்) மற்றும் 1.71 கோடி பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIகள்) என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×