என் மலர்
இந்தியா

400 ரூபாய்க்காக 2 பிரிவினர் மோதல்: பீகாரில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
- இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பதுஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுரகா கிராமத்தில் பால் நிலுவை தொகை ரூ.400 வழங்குவது தொடர்பான தகராறில் 2 பிரிவினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 2 பிரிவினரும் கைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கிகொண்டனர். அப்போது இரு தரப்பினருமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இதில் 50 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தரப்பை சேர்ந்த ஜெய்சிங்(வயது50), சைலேஷ் குமார்(35) ஆகிய 2 பேர், மற்றொரு தரப்பில் பிரதீப்குமார்(35) என 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் சேர்ந்த 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மின்டு குமார் (22) என்பவர் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. வெறும் 400 ரூபாய்க்காக 3 உயிர்கள் பலியானது பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






