என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் விபத்துக்குப் பிறகு மருத்துவ விடுப்பில் இருக்கும்  112 ஏர் இந்தியா விமானிகள் - மத்திய அரசு
    X

    அகமதாபாத் விபத்துக்குப் பிறகு மருத்துவ விடுப்பில் இருக்கும் 112 ஏர் இந்தியா விமானிகள் - மத்திய அரசு

    • 51 கேப்டன்கள் (பைலட் இன் கமாண்ட்) மற்றும் 61 விமானிகள் ஆகியோர் அடங்குவர்
    • பணியாளர்களின் மன ஆரோக்கியத்தை விரைவாக மதிப்பிடுவதற்கு தேவையான வழிமுறைகள் இருக்க வேண்டும்.

    கடந்த மாதம் 12 ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட விமானிகள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    நான்கு நாட்களில் விடுப்பு எடுத்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

    மருத்துவ விடுப்பு எடுத்தவர்களில் 51 கேப்டன்கள் (பைலட் இன் கமாண்ட்) மற்றும் 61 விமானிகள் ஆகியோர் அடங்குவர் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மக்களவையில் தெரிவித்தார்.

    2023 ஆம் ஆண்டில் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அவர் மக்களவையில் விளக்கினார்.

    மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது பணியாளர்களின் மன ஆரோக்கியத்தை விரைவாக மதிப்பிடுவதற்கு தேவையான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

    பிரச்சினைகள் ஏற்பட்டால் விமானக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உதவ சக ஆதரவு குழுக்களை அமைக்க அப்போது பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×