search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட் என்றால் என்ன?
    X

    'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்றால் என்ன?

    • அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது.
    • ர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    சர்க்கரை நோய் டாக்டர் ஒருவர் கூறும் போது, "நவீன ஆலைகளில் தீட்டப்பட்டு அழகான சாக்கு பைகளில் கவர்ச்சிகரமாக பேக்கிங் செய்யப்பட்டு வரும் அரிசிகளில் பெருமளவில் காணப்படுவது மாவுச்சத்து மட்டுமே. இந்த அரிசியை உண்டவுடன் உடலின் ரத்த ஓட்டத்தில் வேகமாக இனிப்பை திணிக்கிறது. இதனை 'குளுக்கோஸ் ரைசிங் எபெக்ட்' என்போம். இன்றைக்கு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வெள்ளை அரிசி சாதம் உண்பது ஒரு மிகப்பெரிய காரணம்.

    நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெள்ளை அரிசியை உண்ணும்போது அவர்களின் உடல் நிலை மேலும் மோசமாகும். ஆனால், இதற்கு நேர்மாறாக சிவப்பு அரிசி என்று சொல்லப்படும் பாரம்பரிய தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியை உண்ணும்போது அதில் இருக்கும் அதிகமான வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உடலில் சர்க்கரை உயர்வதை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு வருவதை தடுப்பதுடன், நீரிழிவு இருந்தாலும் கட்டுக்குள் வைக்கிறது" என்றார்.

    Next Story
    ×