என் மலர்
செய்திகள்

ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியிறக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகத்தின் 845-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழாவின் நிறைவு விழா கொடியிறக்கம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராகிம் பாதுஷா நாயகத்தின் 845-வது ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஜூலை 4-ந்தேதி தொடங்கியது.
இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று 2-ந்தேதி மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது. இந்த விழாவில் தென் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியிறக்கத்தை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள பழைய குத்பா பள்ளிவாசலில் மவ்லீது (புகழ்மாலை) ஓதப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு நெய் சாதம் பிரசாதமாக வழங்கப் பட்டது.
மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தக்பீர் முழக்கத்துடன் ஹக்தார்கள் கொடியிறக்கினர். இறக்கப்பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு துவா (பிரார்த்தனை) ஓதப்பட்டது.
இதை தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் பெற்றுச் சென்றனர். கொடியிறக்கத்தை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமமின்றி சொந்த ஊர்க்க திரும்பிச் சென்றனர்.
ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின்பேரில், ஊராட்சி உதவி இயக்குநர் கேசவ நாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகலா, அன்புக்கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது ஆலோசனையின் பேரில் ஊராட்சி செயலர் அஜ்மல் கான் மேற்பார்வையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்யப் பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தர் பொது மகா சபையினர் செய்திருந்தனர்.

Next Story