search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    சிறகுகள் கொண்ட பாம்பு உண்மையில் இருக்கிறதா? வைரல் புகைப்படத்தின் பின்னணி
    X

    சிறகுகள் கொண்ட பாம்பு உண்மையில் இருக்கிறதா? வைரல் புகைப்படத்தின் பின்னணி

    • 2010ல் ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் இதே புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
    • டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக, சிறகுகள் கொண்ட பாம்பின் புகைப்படம் வைரலானது. அது உண்மையான பாம்புதான் என்ற வகையில் கருத்து பகிரப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த மக்கள் பலரும் ஆச்சரியமடைந்தனர். அதேசமயம், இது உண்மையாக இருக்காது, ஏமாற்று வேலை என்றும் பலர் கமென்டில் பதிவிட்டனர்.

    இதையடுத்து இந்த படத்தின் உண்மைத்தன்மையை சரிபார்த்ததில், சாதாரண பாம்பின் புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சிறகுகள் இணைத்து உண்மையான பாம்பு போன்று சித்தரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம், படத்தை தேடியபோது, ஓவியர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கான ஆன்லைன் சமூக வலைத்தளமான டீவியன்ட் ஆர்ட்டில் அதே படம் பகிரப்பட்டிருந்தது தெரியவந்தது. குராமே என்ற பயனர் 2010இல் அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் திட்டத்திற்காக இதை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஒரு பாம்பின் புகைப்படம் மற்றும் இறக்கைகளின் படத்ததை தனித்தனியாக சேகரித்தாக கூறியிருந்தார். எனவே, டிஜிட்டல் டூல்களை பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது என்ற உண்மை வெளிப்படுகிறது. பழைய படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக்கி வருவதும் தெரியவந்தது.

    மேலும், இன்றுவரை சிறகுகள் கொண்ட பாம்பு போன்ற உயிரினங்கள் எதுவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இத்தகைய உயிரினம் இருந்ததற்கான பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது படங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×