என் மலர்
செய்திகள்

சோனியா காந்தி
வலைதளங்களில் வைரலாகும் சோனியா காந்தி புகைப்படம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனியா காந்தியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது இத்தாலி நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒட்டாவியோ குவாத்ரோச்சி போபர்ஸ் ஊழல் வழக்கு குற்றவாளி ஆவார்.
1980 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அரசு மற்றும் ஸ்வீடனை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான போபர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் நடந்த ஊழலில் குவாத்ரோச்சி முக்கிய குற்றவாளி ஆவார்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், சோனியா காந்தியுடன் இருப்பது இத்தாலி நாட்டு தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது ராகுல் காந்தி என்றும், இது 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது.
இதே தகவல் வைரல் புகைப்படத்தின் ஓரத்திலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் ஏப்ரல் 8, 1996 அன்று புது டெல்லியில் எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் சோனியா காந்தியுடன் இருப்பது ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story






