search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படங்கள்
    X
    வைரல் புகைப்படங்கள்

    சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

    யோகா குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என கூறுவோர் முகத்தில் அடிப்பது போன்று இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

    முஸ்லீம்கள் யோகா செய்யும் போது எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரு புகைப்படங்களும் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து இரு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம்வரத் துவங்கியுள்ளன. ``யோகா குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என கூறுவோர் முகத்தில் அடிப்பது போன்று இந்த புகைப்படங்கள் உள்ளன," எனும் தலைப்பில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இவற்றில் ஒன்று ஆமதாபாத் நகரில் எடுக்கப்பட்டது என்றும் மற்றொன்று அபுதாபியில் எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இவை முறையே 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் எடுக்கப்பட்டவை ஆகும். இரு புகைப்படங்களும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை ஆகும். 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×