என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் அருகே வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல்
    X

    விருதுநகர் அருகே வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல்

    வியாபாரி உள்பட 2 பேரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். மானாமதுரை பள்ளி தாளாளரிடம் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019

    விருதுநகர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார், தேங்காய் வியாபாரி. இவர் லாரியில் தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு விருதுநகர் வந்தார்.

    பின்னர் விற்பனை பணம் ரூ.80 ஆயிரத்துடன் லாரியில் ஊருக்கு புறப்பட்டார். அல்லம்பட்டி முக்கு ரோடு பகுதியில் வந்த போது பறக்கும் படை அதிகாரி மாரியப்பன் தலைமையிலான குழுவினர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவர்கள் சரவணகுமாரிடம் இருந்த ரு.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை எனகூறி வட்டாட்சியர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் தனது மகள் திருமணத்திற்காக திருச்சி சென்று பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆவியூர் சோதனை சாவடி வந்தபோது பறக்கும் படை அதிகாரி ராமராஜி காரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது உரிய ஆவணம் இல்லை என கூறி தமிழ்மணி வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தார்.

    மானாமதுரை 4 வழிச் சாலையில் உள்ளது குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியின் தாளாளர் பூமிநாதன் காரில் சென்றார். திருப்பாச்சேத்தி சோதனை சாவடி அருகே வந்தபோது பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி தலைமையிலான குழுவினர் காரை நிறுத்தி சோதனை செய்த னர்.

    அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் பூமிநாதன் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    Next Story
    ×