search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை டாடி என்று சொல்வதில் தவறில்லை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    மோடியை டாடி என்று சொல்வதில் தவறில்லை - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    மோடியை டாடி என்று சொல்வதில் தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். #ministerrajendrabalaji

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

    எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டும் தான் சீட் கிடைக்கும். அம்மா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஜனநாயக கூட்டணி. தி.மு.க. ரவுடி கட்சி. ராதாரவியை சமயம் பார்த்து ஸ்டாலின் பழிவாங்கி விட்டார்.

     


    ஜெயலலிதா இருந்த போதே ஓ.பி.எஸ். மகனுக்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தி.மு.க.வில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்துள்ளார்.

    அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும். அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. டி.டிவி. தினகரனுக்கு கண்டிப்பாக பொதுச் சின்னம் கிடைக்காது. தேர்தல் கமி‌ஷனில் ஒரு மாதத்திற்கு முன்பே பதிந்திருக்க வேண்டும். சட்டத்தை யாராலும் வளைக்க முடியாது.

    ஜல்லிக்கட்டிற்கு தடை போட்டது தி.மு.க. ஆட்சி. தடையை நீக்கியது அ.தி.மு.க. ஆட்சி. மோடியை டாடி எனக் கூறுவதில் என்ன தவறு? இந்திராவை அவர்கள் அன்னை எனக் கூறவில்லையா? நாங்களும் இந்திராவை அன்னை என்றுதானே கூறுகிறோம். மோடியை தந்தை (டாடி) என கூறுவதில் தவறில்லை. எங்கள் கூட்டணி மதச்சார் பற்ற கூட்டணி.

    இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். பி.ஜே.பி. ஆட்சி காலத்தில் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

    ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. 40-க்கு 40 பாராளுமன்ற தொகுதியிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார். #ministerrajendrabalaji

    Next Story
    ×