என் மலர்
செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபட டிஜிபி ராஜேந்திரனுக்கு தடை விதிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
தேர்தல் பணிகளில் ஈடுபட டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், உங்கள் கோரிக்கை மனுவாக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது.

அதற்கு நீதிபதிகள், உங்கள் கோரிக்கை மனுவாக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
Next Story