என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரிவலம்வந்தநல்லூரில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி
- முத்து வீரப்பனும்,கணேசனும் கிணற்றில் குளித்துள்ளனர்.
- கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பெருமாள்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்து வீரப்பன்(வயது 29). கூலி தொழிலாளி. இவரது நண்பர் கணேசன். இவர்கள் 2 பேரும் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு பெருமாள்பட்டி-மாங்குடி சாலையில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். அப்போது முத்துவீரப்பன் தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணேசன் உயிருக்கு போராடியபடி கத்தி கூச்சலிட்டார். உடனே தோட்டத்தில் நின்றிரு ந்தவர்கள் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து கணேசனை மீட்டனர்.
இதுகுறித்து கரிவல ம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து முத்துவீரப்பன் உடலை மீட்டனர். கணேசனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






