என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
தேனியில் இளையோர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
- எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.
தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி கள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டியினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.
எய்ட்ஸ் மற்றும் பால்வினைத்தொற்று, வளர் இளம் பருவ நலன், மனநலம், மற்றும் போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்பு ணர்வினை மாணவர்க ளிடம் ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் வழியாக பழனிசெட்டிபட்டி மேனகா மில் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2ம் பரிசாக ரூ.7000, 3ம் பரிசாக ரூ.5000 மற்றும் 7 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது.
மேலும், சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் வினாடி வினா, நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகள் நடைபெற்றது.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாடு அலுவலர் முகமது பாரூக், தேனி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






