என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
- அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு நடந்தது.
- விரக்தியடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பந்தாரபள்ளி பகுதியைச் நஞ்சுப்பா (வயது34).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்தகராறு நடந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் சமாதானப் படுத்தினர்.
அப்போது நஞ்சுப்பாவை கிராம மக்கள் திட்டியதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நஞ்சுப்பாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






