என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் ரெயிலில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
- ஓடும் ரெயில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- நவீன தொழிற்நுட்பம் மூலம் குற்றவாளியை கண்டறிந்துள்ளனர்.
மயிலாடுதுறை இருந்து மைசூர் மார்க்கமாக செல்லும் விரைவு ரெயிலில் கடந்த 6-ந் தேதி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் பயணம் செய்தார்.
அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி என்ற இடத்தில் நள்ளிரவில் ரெயில் நின்று புறப்படும் சமயம் பார்த்து தூக்க மஞ்சுளாவின் கழுத்திலிருந்த இரண்டரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஒரு திருடன் தப்பித்து விட்டான்.
இதே போல கோயமுத்தூ ரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரெயிலில், கடந்த 9-ந் தேதி கரூர் நடை மேடையில் ரெயில் நின்று புறப்படும் நேரத்தில், தஞ்சாவூரை சேர்ந்த கலா என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்ற போது, கையில் சிக்கிய ஒரு பவுன் தங்க நகையை மட்டும் பறித்துக் கொண்டு ரெயிலை விட்டு இறங்கி திருடன் தப்பி ஓடி விட்டான்.
இது தொடர்பான 2 புகாரின் பேரிலும், சென்னை ரெயில்வே சைபர் க்ரைம் போலீசார், செல்போன் உரையாடல் களை சி.டி.ஆர். என்ற அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன், நகை பறிப்பில் ஈடுபட்டவர் தருமபுரி மாவட்டம், கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தருமபுரி ரெயில் நிலைய நடைமேடை யில் அவர் சுற்றி திரிந்ததை அறிந்த போலீசார் ராமனை கைது செய்து அவரிடம் இருந்த தங்க நகைகளை மீட்டனர்.
இது தவிர வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளரா என்று விசாரித்து வருகின்றனர்.






